search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜஸ்தான் மந்திரி"

    • ராஜஸ்தான் மாநில பழங்குடியின வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் பாபுலால் கார்டி.
    • பாபுலாலுக்கு 2 மனைவிகள் மூலம் 4 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் பழங்குடியின வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் பாபுலால் கார்டி. இவர் உதய்ப்பூர் மாவட்டம் ஜோடல் தொகுதியில் வெற்றி பெற்றவர்

    இந்நிலையில், பாபுலால் கார்டி நேற்று உதய்ப்பூரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அப்போது அவர் பேசுகையில், பசியுடனும், வீடு இல்லாமலும் யாரும் உறங்கக் கூடாது என்பது பிரதமர் மோடியின் கனவாகும். நீங்கள் நிறைய பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிரதமர் மோடி வீடு கட்டிக் கொடுப்பார். வேறு என்ன பிரச்சனை உங்களுக்கு? என கேள்வி எழுப்பினார்.

    பாபுலாலுக்கு 2 மனைவிகள் மூலம் 4 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

    பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநில அரசுகள் தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடும் நிலையில் ராஜஸ்தான் மந்திரி திறந்தவெளியில் சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தராராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசு தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி வருவதாகவும், இதன் விளைவாக இங்குள்ள 33 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் திறந்தவெளி கழிப்பிடங்களால் இல்லாத மாவட்டங்களாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், அஜ்மீர் நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பேரணியில் பங்கேற்ற அம்மாநில மந்திரி ஷாம்பு சிங் கேட்டசர், திறந்தவெளியில் ஒரு மதில் சுவரின் மேல் சிறுநீர் கழிக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. குறிப்பாக, அவர் சிறுநீர் கழிக்கும் இடத்தின் மிக அருகாமையில் பா.ஜ.க. போஸ்டர் ஒன்றும் காணப்படுகிறது.

    இதுதான், திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்ட தூய்மை இந்தியா என்னும் அடைமொழியுடன் சமூகவலைத்தளங்களில் பதிவாகிவரும் இந்த புகைப்படம் தொடர்பாக ஷாம்பு சிங் கேட்டசர் விளக்கம் அளித்துள்ளார்.


    அந்த பகுதியில் சில கிலோமீட்டர் சுற்றளவில் பொது கழிப்பறை எதுவும் கிடையாது. திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பது காலகாலமாக இருந்துவரும் பழக்கம்தான். இயற்கையின் அழைப்பை சமாளிக்க முடியாமல் நான் திறந்தவெளியில் சிறுநீர் கழித்ததால் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு எந்த பாதிப்பும் வந்து விடாது என்று அவர் தெரிவித்துள்ளார். #RajasthanMinisterurinating #ShambhuSinghKhetsar #SwachhBharatAbhiyan
    பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை சமாளிக்க, மக்கள் தங்களது வீட்டு செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என தேவஸ்தான துறை மந்திரி ராஜ்குமார் ரின்வா கூறியுள்ளார். #PetrolDieselPriceHike #FuelPriceHike #RajkumarRinwa
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வரும் பா.ஜனதா ஆட்சியில் தேவஸ்தான துறை மந்திரியாக இருப்பவர் ராஜ்குமார் ரின்வா. இவர், பொதுமக்களுக்கு கூறிய அறிவுரை, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறியதாவது:-

    பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதால், அவற்றின் விலை உயர்கிறது. இது, பொதுமக்களுக்கு புரியவில்லை. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை சமாளிக்க, மக்கள் தங்களது வீட்டு செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். இதையும் அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.



    நாடு முழுவதும் வெள்ள நிவாரண பணிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவாகும். அதற்கெல்லாம் பணம் தேவைப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை, உலக சந்தையில் தீர்மானிக்கப்படுகிறது. அதற்கும், அரசுக்கும் சம்பந்தம் இல்லை.

    இவ்வாறு ராஜ்குமார் ரின்வா கூறினார்.

    அவரது கருத்து, ஆணவம் நிறைந்தது, மனிதத்தன்மை அற்றது என்று மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கண்டனம் தெரிவித்துள்ளார்.  #PetrolDieselPriceHike #FuelPriceHike #RajkumarRinwa 
    ×